districts

img

நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்

சிதம்பரம், ஜன.2 - கடலூரில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின மாவட்ட செயலாளருமான கோ.மாதவன், கடலூர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. இத னால் கடலூர், நெல்லிக்குப்பம், குமராட்சி, காட்டுமன்னார்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட வட்டங்களில்  ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் மஞ்சள் நோய் ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் முழ்கி உள்ள பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை வெளியேற்ற வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்குக் கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.