சென்னை, டிச. 10- கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் அனைத்து முக்கிய சாலைகளில் இருந்து அணுகக்கூடிய வகையில், அருகே உள்ள ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் உள்ளது. சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் 14 கோடி ரூபாய் செலவில் பொழுதுபோக்கு அம்சங்க ளுடன் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார். சென்னை கத்திப்பாரா சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்ப தற்காக, பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டது. ஆசியாவிலேயே மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் கீழ் காலியாக உள்ள 5,38,000 சதுர அடி பரப்பளவில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ரூ1 4.50 கோடி செலவில் நகர்ப்புற சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு, சென்னை நகரின் அடையாளத்தையும் கலாச்சார செழுமையையும் பிரதிபலிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டு உள்ளது.
நகர்ப்புற சதுக்கம் 4 மண்டலங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் சந்தை, உணவகங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் உட்பட இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. வணிக வளா கத்தில் மொத்தம் 56 கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையும் 200 முதல் 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. இதில் 18 கடைகள் உணவு விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஒரே நேரத்தில் 128 கார்கள், 340 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்வையாளர்களுக்கு போதிய அளவு வாகன நிறுத்தும் வசதி யும் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையை 100 அடி சாலை யுடன் இணைக்கும் பேருந்துகளின் இயக்கத்தை எளிதாக்கும் வகையில், தற்போது வாகன சுரங்கப்பாதை மேம்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற சதுக்கத்தின் முழுப் பகுதியும் சூரிய சக்தி விளக்குகள், நிலப்பரப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட விளக்குகள் மற்றும் உயர்கம்ப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் அனைத்து முக்கிய சாலைகளில் இருந்து அணுகக்கூடிய வகையில், அருகே உள்ள ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையிலும் உள்ளது. மாநகர போக்குவரத்துடன் ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளதால், பேருந்துகள் நகர்ப்புற சதுக்கம் வழியாக திரும்பி செல்ல முடியும்.