districts

img

அடுக்குமாடி குடியிருப்புகளை விரைந்து கட்டி முடித்து ஒப்படைத்திடுக

சென்னை, அக். 24- ராயபுரம் கிழக்கு கல்லறை சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை விரைந்து கட்டி  முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப் போர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ராயபுரம் கிழக்கு கல்லறை சாலை பகுதியில் (51ஆவது வட்டம்) குடிசை மாற்று வாரிய இடத்தில் 1978ஆம் ஆண்டு 800 வீடுகளும், 2000ஆம் ஆண்டு 128 வீடுகளும் கட்டப்பட்டு மொத்தம் 928 வீடுகளில் 5000க்கும்  மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் வசித்து வந்தனர்.  1978ஆம் ஆண்டு கட்டப்பட்ட 800 குடியிருப்புகள்  40  ஆண்டுகளை கடந்து விட்டதால்  சேதமடைந்துள்ளது. இதை யடுத்து நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 2022ஆம் ஆண்டு மே மாதம் கணக்கெடுப்பு நடத்தி, புகைப்படம் எடுக்கும் பணியை துவங்கியது. பின்னர்  கடந்த மார்ச் மாதம் 780  பேருக்கு ஒதுக்கீடு ஆணையும்,  8 மாதத்திற்கான வாடகை பண மாக ரூ.24,000 காசோலை யாகவும் வழங்கியது. இன்னும்  148 பேருக்கு தர வேண்டி யுள்ளது. இதையடுத்து குடியிருப்பு  வாசிகளில் 90 சதவிகிதத்தின ருக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து வாடகை குடி யிருப்புகளுக்கு சென்று 8 மாதங்களுக்கு மேலாகிறது. பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கதவு, ஜன்னல்கள் அகற்றப்பட்டன. ஆனால் குடியிருப்புகளை இடிக்க எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. இது குறித்து சங்கத்தின் செயலாளர் எம்.ராஜா, பொருளாளர் லோ.மோகன் கூறுகையில், குடி யிருப்புகளை இடித்து, புதிய  குடியிருப்புகள் 8 மாதத்தில் கட்டி  முடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறினர். அதை நம்பித்தான் குடியிருந்தவர்கள் காலி செய்து வேறு வாடகை வீட்டிற்கு சென்ற னர். அவர்கள் 8 மாத வாடகை யாக ரூ.24 ஆயிரம் வழங்கி னார்கள். சென்னையில் 3 ஆயிரம் ரூபாய் வாடகையில் வீடு எங்கே கிடைக்கும் என  கேள்வி எழுப்பினார்.

இப்போது  8 மாதங்கள் கடந்த நிலையில் குடியிருப்புகளை இடிக்கும் பணி  கூட இன்னும் துவங்கவில்லை. பலரும் வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர் என்று அவர்கள் கூறினர். தலைவர் டி.வெங்கட் கூறு கையில், இதுகுறித்து அமைச்சர்,  துறை இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் முறையிட்டும் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு 928 குடியிருப்புகள் மட்டு மல்லாமல், குடிசை வீடுகள் அமைத்து 450 குடும்பங்கள் வசிக்கின்றனர். எனவே உடனடியாக பழைய  குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய குடியிருப்புகளை விரைந்து கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை வாடகை  பணத்தை வழங்க வேண்டும்.  ஒதுக்கீடு ஆணை வழங்காமல்  உள்ள 148 பேருக்கும் உடனடி யாக ஒதுக்கீட்டு ஆணை மற்றும் வாடகை வழங்க வேண்டும். அதேபோல் குடிசை அமைத்து வசித்து வருபவர்களையும் கணக்கெடுத்து அவர்களுக்கும் வீடு ஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்  கொண்டனர். மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதனன்று (அக். 25) அனைத்து அரசியல் கட்சி கூட்டமைப்பு இயக்கம், குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துகி றோம். அதன்பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில், இந்த குடி யிருப்புவாசிகளின் ஏழ்மை நிலையையும் கவனத்தில் எடுத்து, உடனடியாக சிறப்பு நிதி ஒதுக்கி புதிய குடியிருப்புகளை கட்டி பயனாளிகளிடம் ஒப்ப டைக்க முன்வர வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.