சென்னை,அக்.15- தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் வகை தயாரிப்பாளர்கள், விற்பனை யாளர்கள், கடைக்காரர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பூந்த மல்லியில் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் பூந்தமல்லி, கரையான் சாவடி, குமணன்சாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இனிப்பு கடைகள், பேக்கரி கள், இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் கலந்து கொண்டனர். இதில் பண்டிகை காலத்தில் தரமான இனிப்பு, காரம், தின்பண்டங்கள் தயாரிப்பது குறித்தும், செயற்கை நிறமூட்டிகளை தவிர்ப்பது, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடுதல், தண்ணீர் பரிசோதனை, சுகாதாரம், பணியாளர்களின் நலன், ஒன்றிய, மாநில அரசுகள் வகுத்துள்ள உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வேலவன், ரவிச்சந்திரன், இனிப்பு காரம் தயாரிப்பவர்கள், வியாபாரிகள், உணவகங்களின் உரிமையாளர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.