districts

img

வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

விழுப்புரம்,ஆக. 26-

    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலருமான டாக்டர் சி.பழனி தலைமை தாங்கி, சனிக்கிழமையன்று (ஆக.26) வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட்டார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சாராட்சியர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.