districts

பள்ளிகளுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை,ஜூலை 8-

     சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி களில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

    89தேர்வுக்கான உத்தேச கால அட்ட வணை மாணவர்கள் நலன்கருதி தற்போது வெளி யிடப்பட்டுள்ளது.அதன்படி 6முதல்12ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27ந் தேதி வரையும், அரையாண்டுத் தேர்வுகள் டிச.11-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்புக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்படும். இது தவிர 12, 11 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான அலகு மற்றும் திருப்புதல் தேர்வுக்கான, 6 முதல் 9-ம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் போன்ற விவ ரங்கள் அதில் குறிப்பிடப் பட்டுள்ளன. இதைப் பின்பற்றி மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த தேவையான நடவடிக்கை களை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;