திருப்போரூர்,ஜூன் 8-
2021-ம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிக்காக அரசு சார்பில் சென்னையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் நான்கு சுங்கச்சாவடி கள் மூடப்பட்டன. நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி யில் குடியிருப்போர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பழைய மாமல்லபுரம் பகுதிவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாவலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சருக்குகடிதமும் அனுப்பி உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 3 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் அனைவரும் நாவலூரில் உள்ள சுங்கச்சா வடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற னர்.
தற்போது பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கம், காரப்பாக்கம் சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிக்காக சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடை பெற்று வருகிறது. ஆனால் நாவலூரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.