சென்னை, மார்ச் 12- தேசத்தின் கேந்திரமாக விளங்கக்கூடிய ரயில்வேக்கு பெட்டிகள் தயாரித்து வழங்கும் ஐசிஎப் நிறுவனத்தில் தனியார் மயத்தை அனுமதிக்கக் கூடாது என யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் வலி யுறுத்தியுள்ளது. ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) 47ஆவது மாநாடு ஐசிஎப் வடக்கு காலனியில் ஸ்தாபக தலைவர் எஸ்.கிருஷ்ணன், ஏ.வி.உதயரவி நினைவரங்கில் (மருதம் நன்னல மையம்) சனிக்கிழமை (மார்ச் 12) நடைபெற்றது. தலைவர் எஸ்.ராமலிங் கம் தலைமை தாங்கி னார். சங்க கொடியை கணேஷ்பாபு ஏற்றி வைத்தார். இணைச் செயலா ளர் ந.வேலாயுதம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பொதுச் செயலாளர் பா.ராஜாராமன் வேலை ஸ்தாபன அறிக்கையையும், பொருளாளர் வி.சுரேஷ் வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை மாநாட்டை நிறைவு செய்து உரை யாற்றினார்.
தீர்மானங்கள்
ஐசிஎப் நிறுவனத்தில் அதிகரித்து வரும் தனியார் மயத்தை கைவிடுக, ஐசிஎப்-இல் உற்பத்திக்கு ஏற்றார்போல் தொழிலாளர் எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டும், தங்க சுரங்கமான ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு தாரைவார்க்காதே, ரயில்வேயை கூறுபோடும் ‘விவேக் தேப்ராய்’ பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஐசிஎப் உள்ளிட்ட உற்பத்திப் பிரிவுகளை கார்ப்பரேஷன்களாக மாற்றி கார்ப்பரேட் கைக ளில் ஒப்படைப்பதை கைவிட வேண்டும், ரயில்வே யில் உள்ள காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும், ஐசிஎப் உள்ளிட்ட பாதுகாப்பு மிக்க பகுதிகளில் வேலை வாய்ப்பை நிரப்பும் போது சீனியாரிட்டி அடிப்படையில் ஆக்ட் அப்ரண்டீஸ்களுக்கு முன்னுரிமை வழங்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள்
செயல் தலைவராக வி.எம்.கிருஷ்ணகுமார், தலைவராக எஸ்.ராம லிங்கம், பொதுச்செய லாளராக பா.ராஜாராமன், பொருளாளராக கே.டி.ஜோஷி உள்ளிட்ட 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக இணை பொதுச் செயலாளர் சி.சத்யமூர்த்தி வரவேற்றார். இணைச் செயலாளர் எஸ்.ஜெ.தங்க ராஜ் நன்றி கூறினார்.