districts

img

கர்ப்பிணிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்

சென்னை, மே 31- பெண்கள் தங்களது கர்ப்பப் காலத்தில் பதிவு செய்ய ஏதுவாக புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்து ஆன்லைன் மூலம் ஆர்சிஎச் ஐடி பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. இனி கர்ப்பிணிகள் தங்களின் கர்ப்ப பதிவு தமிழ்நாடு அரசு தற்போது அறிமுகப் படுத்தியுள்ள PICME 3.0 என்னும்  புதிய இணையதளம் மூலம் தாங்களாகவே  பதிவு செய்யலாம். இந்த புதிய இணைய தளத்தில் ஒவ்வொரு கர்ப்பிணியும் கிராம சுகாதாரச் செவிலியரை அனுகாமல் தாங்களே தங்களது கர்ப்பப் பதிவை http://picme3.tn.gov.in என்னும் இணைய தளம் மூலம் பதிவு செய்து RCH - ID எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு கர்ப்பிணியின் ஆதார் எண்ணை  உள்ளீடு செய்தால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபியை பதிவு செய்து சுய விவரங்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளீடு செய்து பிக்மி எண்ணைக் குறுந்தகவல் மூலம் பெறலாம். மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி பெறும் கர்ப்பிணி தாய்மார்கள் தாங்களே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த நிதியுதவியைப் பெற ஆதிதிரா விடர், பழங்குடியினர் அடையாள அட்டை, ஊனமுற்றோர் தாய்மார்கள் அடையாள அட்டை, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள தாய்மார்களின் குடும்ப அடையாள அட்டை (PHH, AAY, Ration card) பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா பய னாளிகள் அடையாள அட்டை, இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய  அடையாள அட்டை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்க ளில் ஏதேனும் ஒன்றைப் பதிவேற்றம் செய்ய லாம். மேலும், குடும்ப நிகர வருமானம் 8  லட்சத்துக்கும் கீழ் உள்ளவர்களின் வரு மானச் சான்றிதழ், அங்கன்வாடி, ஆஷா பணி யாளர்களுக்கான அடையாள அட்டை, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை அடையாள அட்டை, இலங்கை அகதிகள் அடையாள அட்டை, ஒன்றிய, மாநில அர சால் சமுதாயத்தில் பின்தங்கிய தாய்மார் களுக்கு வழங்கப்படும் அட்டை ஆகிய அடையாள ஆவணங்களிலும் ஏதேனும் ஒன்றைப் பதிவேற்றம் செய்து பெற்றுக் கொள்ளலாம். ஒன்றிய, மாநில அரசில் நிரந்தரப் பணியாளர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த நிதி உதவியைப் பெற இயலாது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி 3 தவணைகளாகவும், ஊட்டச் சத்து பெட்டகம் 2 தவணைகளாகவும் வழங்கப்படும். மேலும், புலம் பெயர்ந்த தாய்மார்களும், உயர் பிறப்பு பிரிவின் தாய்மார்களும், இரண்டு ஊட்டச்சத்து பெட்டகமும், 2ஆம் தவணையும் மட்டுமே பெறத் தகுதி உடையவர்கள் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

;