districts

img

கொரோனா காலகட்டத்தில், சித்த மருத்துவத்தின் பங்களிப்பு அளப்பரியது

சென்னை, டிச.23 -  பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என ஒன்றிய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்கு வரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர்  சர்பானந்தா சோனோவால் கூறி யுள்ளார். ஒன்றிய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவ னம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து நடத்திய, ஐந்தாவது சித்தர் தினம்  “தொற்று நோய்களுக்கான பரி காரத்தில் சித்த மருத்துவத்தின் வலிமை” எனும் தேசிய மாநாடு, நந்தம் பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆண்டு விழா  மலரை வெளியிட்டுப் பேசிய ஒன்றிய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சித்த மருத்துவத்தின் தந்தையாக அகத்தியர் கருதப்படு கிறார் என்றார். நடப்பு 21-ம் நூற்றாண் டில் மக்களின் நலன் காக்க, சித்த  மருத்துவம் உதவியாக உள்ளது. கொரோனா காலகட்டத்தில், சித்த  மருத்துவத்தின் பங்களிப்பு அளப்பரி யது. சித்த மருத்துவர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது என்றார். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளின் உதவியுடன், நோயிலிருந்து மக்களை காக்கும் சித்த மருந்துகளை கண்டுபிடிப்பதற்காக, அதற்கான கல்வி மற்றும் ஆராய்ச்சி களை மேம்படுத்த வேண்டும். என்றும் அமைச்சர் சர்பானந்த சோனோ வால் கேட்டுக் கொண்டார். கொரோனா தொற்று பாதித்த நோயாளியின் ஆக்ஸிஜன் அளவு, 60 விழுக்காடு வரை குறைந்தும், சித்த மருத்துவத்தின் உதவியால் காப்பாற்றியது இதற்கு  சிறந்த உதாரணம் என்றும் குறிப் பிட்டார்.

விரைவில் சித்தா பல்கலை கழகம்

நிகழ்ச்சியில் பேசிய மாநில மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிர மணியன் சித்த மருத்துவத்திற்கென தனி பல்கலைக்கழகம் துவங்கு வதற்கான அறிவிப்பு விரைவில் வெளி யிடப்பட உள்ளது என்றார். மேலும், தமிழகத்தில் 1,079 ஆரம்ப சுகாதார நிலை யங்களில், சித்த மருத்துப் பிரிவு துவங் கப்பட்டுள்ளது. 2007ல் சிக்குன்குனியா காய்ச்சலுக்கு முதல் முதலாக நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது என்றும்  அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய ஆயுஷ்  துறை செயலாளர்,  வைத்ய ராஜேஷ்  கொடேசா, சிறப்புச் செயலர் பிரமோத்  குமார் பதக், மனோஜ் நேசரி, ஆலோசகர் (ஆயுர்வேதம்), ஆயுஷ் அமைச்சகம், ஒன்றிய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குநர் கனகவல்லி, தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் மீனாகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;