districts

img

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா: சுடர் பயணம் துவங்கியது

புதுச்சேரி,செப்.30- கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழா புதுச்சேரியில் சுடர் பயணத்துடன் துவங்கியது. மக்கள் கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் உள்ள செ.து.சஞ்சீவி நினைவரங்கத்தில் துவக்க விழா சனிக்கிழமை (செப்.30) அன்று நடை பெற்றது.  சங்கத்தின் புதுச்சேரி தலைவர் உமா அமர்நாத் தலைமை தாங்கினார். செய லாளர் மணி.கலியமூர்த்தி வரவேற்று பேசி னார். கவிஞர் தமிழ்ஒளி குறித்து  பாராட்டரங்கம், கருத்தரங்கம், வாழ்த்த ரங்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் சிகரம் செந்தில்நாதன், கவிஞர் சைதை. ஜெ, எழுத்தாளர் எஸ்.ராமச்சந்திரன், எல்லை சிவக்குமார், பாவலர் சண்முகசுந்தரம், முனைவர் அமிர்த வள்ளி, அ.செந்தில்குமார், சு.சுரேந்திரன், மதுசூதனன்,உமா அமலோற்பவ மேரி ஆகியோர் பேசினர்.  விழாவில் ஒருங்கிணைப்பாளர் கு.பச்சையம்மாள், எழுத்தாளர்கள் மற்றும் கலை ஞர்கள் சிந்துஜா, வீர.அரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், விநாயகம், நிலவழகன்,  உட்பட பலர் பங்கேற்றனர். விழா வில் தமிழ் ஒளி குறித்து செய்தி மடல் ஒன்று வெளியிடப்பட்டது. முன்னதாக, கவிஞர் தமிழ்ஒளி வாழ்ந்த சாமி பிள்ளை தோட்டம் பகுதி யில் இருந்து  நினைவு சுடர்  ஏந்தி வரப்பட்டு, ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து வேலூர் சாரல் கலைக்குழுவினர் தப்பாட்ட கலைக்குழு வின் பயணம் புறப்பட்டது. பின்னர், லாஸ்பேட்டை கல்லூரி சாலையில்  இரவுநேர உரைவீச்சு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.