இராமநாதபுரம்/மதுரை, ஜன.21- தமிழகத்துக்கு மூன்று நாள் பய ணமாக பிரதமர் வெள்ளிக்கிழமை மாலை பெங்களூருவில் இருந்து சென் னை வந்தார். பின்னர் நேரு உள்வி ளையாட்டு அரங்கில் கேலோ இந்தி யா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். சனிக்கிழமை காலை சென்னை யிலிருந்து புறப்பட்ட அவர் விமா னம் மூலம் திருச்சிராப்பள்ளி வந்த டைந்தார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்ற அவர் அரங்நாதரை வழிபட் டார். பின்னர் அங்கிருந்து ஹெலி காப்டர் மூலம் இராமேஸ்வரம் சென் றடைந்தார். அங்கு இராமநாத சுவாமி கோவிலில் தரிசித்துவிட்டு இரவு இராமேஸ்வரத்தில் தங்கினார். மூன்றாவது நாளான ஞாயிற ன்று இராமேஸ்வரத்தை அடுத்து ள்ள தனுஷ்கோடியில் உள்ள கோத ண்டராமர் கோவிலுக்குச் சென்று அங்கு சிறப்பு வழிபாடு செய்தார். சிறப்புப் பூஜைகளையும் அவர் மேற்கொண்டார். பின்னர் அரிச்சல் முனைக்கு சென் றார். அங்குள்ள கடற்கரையில் அமர் ந்து தியானம் செய்தார். பின்னர், அரி ச்சல் முனையில் உள்ள தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், இராமேஸ்வரத்தி லிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப் பட்டு, மதுரை விமான நிலையத்து க்கு நண்பகல் 12 மணிக்கு வந்த டைந்தார். மதுரையிலிருந்து பகல் 12.35 மணிக்கு தனி விமானத்தில் மோடி தில்லி திரும்பினார்.