districts

img

வறட்சியிலிருந்து பயிர்களை காத்திடுக

கிருஷ்ணகிரி, மார்ச் 23- தேன்கனிக்கோட்டை வட்டம், மலை பகுதியான பெட்ட முகிளாலம் ஊராட்சி மற்றும் 48 கிராமங்களின் கோடை வெயில், வறட்சியிலிருந்து விவ சாயத்தை,பயிர்களை காத்திட  வனத்துறை யினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  அய்யூா் அருகே தேன்கனிக்கோட்டை சாலையில் சுற்று வட்ட கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெட்டமுகிலாளம் ஊராட்சி மற்றும் 48 கிராமங்களில் விளையும்    பயிர்கள், பீன்ஸ், தக்காளி, ரோஸ், சாமந்தி போன்ற பணப் பயிர்கள், ராகி உட்பட தண்ணீா் இன்றி வாடுவதால் விவசாயிகள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரு ஏக்கா் பீன்ஸ், தக்காளி சாகுபடி செய்ய ரூ.1 லட்சமும், சாமந்தி, ரோஸ் உள்ளிட்ட பூ வகைகளை பயிர் செய்ய ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வரையும் செலவு ஆகிறது. இவை அனைத்தும் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் வாடியுள்ளன. சுமார்  2,000 ஏக்கரில் ரூ.10 கோடி மதிப்பி லான பணப் பயிர்கள்  உட்பட நீரின்றி அழி யும் நிலை உள்ளது. எனவே பயிர்களைக் காப்பாற்ற கிராமத்தில் உள்ள கிணறுகளை தூர்வாருவதோடு தேவையான இடங்க ளில் ஆழ்துளைக் கிணறுகளும் அமைக்க வேண்டும். இவ்வேலைகளை செய்வதற் கான கனரக இயந்திரங்களை மலை  கிராமங்களுக்குள் செல்ல வனத்துறை அனு மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்க ளின் மொத்த விவசாயமும், வாழ்வாதார மும் அழிந்து போகும் நிலை ஏற்ப டும். சாலைமறியலையொட்டி ஒரு மணி நேரத்துக்கு பின் அங்கு வந்த வனத்துறை யினர் மற்றும் அரசு அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் சாலை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.