districts

img

கூட்டுறவு நிறுவனத்தின் சொத்துகளை விற்க எதிர்ப்பு

புதுச்சேரி பான்பேப் கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான  நிலத்தை விற்கும் அரசின் முடிவை கண்டித்து முத்தியால்பேட்டை மணிகூண்டு எதிரில் திமுக,காங்கிரஸ், சிபிஎம்,சிபிஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், எதிர்கட்சி தலைவர் சிவா, திமுக அவைத்தலைவர் சிவக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.