districts

img

காஞ்சிபுரம் பழக்கடையில் அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம், மே 31 - காஞ்சிபுரத்தில் உள்ள பழக்கடைகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய் யப்படுவதாக உணவு பாது காப்பு துறை அதிகாரி களுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலு வலர் அனுராதா தலைமை யில் அலுவலர்கள் காஞ்சி புரத்தில் உள்ள பழக்கடை கள், குளிர்பானக் கடைகளில்  திடீர் சோதனை செய்தனர்.  அப்போது அங்கிருந்த காலாவதியான பொருட் களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் குளிர் பானங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக் கூடத் திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு விதிகளை கடைபிடிக்காமல் செயல் பட்ட கடைகளுக்கு நோட் டீஸ் அளித்தனர். மேலும், ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதி காரிகள் எச்சரித்தனர்.