ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 10ஆவது வார்டு மெட்பிளஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டுக்கும் வழிவகுக்கிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்பட்டு கடந்து போக வேண்டி இருக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் அ.ஜான் கோரிக்கை விடுத்துள்ளார்.