கிருஷ்ணகிரி, நவ. 8- ஓசூரின் அடை யாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது சந்திராம்பிகை ஏரி. 1978 இல் ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டைகள் பல பெருந் தொழிற்சாலையின் குழுமங்கள் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் கர்நாட கா,ஆந்திரா, மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் வேலை நிமித்தமாக ஓசூர் நகரிலும் பிற பகுதிகளிலும் சந்திராம்பிகை ஏரியொட்டிய பகுதிகளிலும் குடியேறினர். 60 ஏக்கர் பரப்புள்ள இந்த ஏரி ஓசூர் நகருக்குள் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை வருடத்தில் 4 மாதங்கள் பெய்யும் மழையாலும், ராம நாயக்கன் ஏரி உபரி நீராலும் எப்போதும் நீர் நிறைந்து உபரி நீர் வெளியேறிக் கொண்டே இருக்கும். இருந்த அரசனட்டி, மத்தம், மற்றும் மூக்கண்டப்பள்ளி எலசகிரி உட்பட பல கிராமங்களின் விவசாயத்திற்கும் மக்கள் பயன்பாட்டிற்கும், குடிநீர் ஆதாரமாகவும், இப்பகுதிகளில் குடியேறி வசித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு குளிக்க துணி துவைக்கவும் இந்த ஏரி பெரிதும் பயன்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் கழிவுநீர் நிற்கும் ஏரியாக இது மாறியது.
ஆக்கிரமிப்புகளால் முப்பது ஏக்கருக்குள் சுருங்கிவிட்டது. ஏரியின் கிழக்கு பகுதியில் முப்பது ஆண்டு களுக்கு முன்பிருந்த கரையில் இருந்து சுமார் 300 அடிக்கு உட்புற மாக பெரிய மருத்துவ மனைகள் வணிக வளாகங்கள் உணவகங்கள் கட்டப்பட்டுள்ளன. மற்று மூன்று பகுதிகளிலும் குடி யிருப்புகள் கடைகள் தொழிற்சாலை கள் முழுவதும் கழிவுநீர் தேங்கும் நிலையில் ஏரியில் ஆகாயத்தாமரை வளர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மீன் பிடிக்க ஏலம் எடுப்பவர்கள் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஏரிக்குள்ளேயே கரை ஓரங்களில் கொட்டியதால் ஏரி இன்னும் பல மடங்கு குறைக்கப்பட்டு வருகிறது. அதே போல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் ஆகாயத் தாமரைகளை அகற்றி ஏரிக்குள்ளேயே கரையோர மாக கொட்டி சுமார் 100 அடி அகலத்திற்கு மேடாக்கி உள்ளனர். இது மாநகராட்சி நிர்வாகத்திற்கும் அரசு அதி காரிகளுக் கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் வழக்கம்போல் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு அதிகாரிகள் மீது பொதுமக்கள் சந்தேகப்படும். சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே 2011 இல் ஜெயலலிதா ஆட்சியின் 6 மாதத்தில் ஏரியை தூர்வாரி சீரமைத்து பொழுதுபோக்கிற்காக படகு இல்லம் மற்றும் பூங்கா அமைத்து தருகிறேன் என்று அப்போது அமைச்சராக இருந்த கே.பி. முனிசாமி (தற்போதைய வேப்பணப் பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பி னர்) இப்பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் உறுதியளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் ஏரியை சீர்படுத்தவும் படகு இல்லம் அமைக்கவும் கேபி முனிசமியும், கடந்த கால அதிமுக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக இந்த ஏரி கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மக்க ளுக்கும் பயன்படாமல் உள்ளது. மாவட்ட ஆட்சியரும், மாநகர ஆணையாளரும் உடன் தலையிட்டு ஏரியின் ஆக்கிரமிப்புகளையும் உள்ளே கொட்டப்பட்ட ஆகாயத்தாமரை குப்பைகளையும் அகற்றி, தூர் வாரி, கழிவுநீர் ஏரிக்கு வருவதை தடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி ஓசூர் மாநகரக் குழு சார்பில் செயலாளர் சி.பி. ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.