districts

img

காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதிக்குழு உறுப்பினர் க.தண்டபாணியின் தாயார் சுகுந்தலா சனிக்கிழமையன்று (நவ.19) காலமானார். போரூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், எஸ்.வெள்ளைச்சாமி, ச.லெனின், எஸ்.குமார், பகுதிச் செயலாளர் வி.தாமஸ், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணச்செல்வி மற்றும் காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அன்னாரது உடல் ஞாயிறன்று (நவ.20) போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.