districts

மின் அளவை கணக்கீடு புதிய கருவி

சென்னை, செப்.12- ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தப் பட்ட இடங்களில் நுகர்வோர் பயன் படுத்தியுள்ள மின்சாரத்தை கணக்கீடு செய்ய செல்லும் ஊழியர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய கணக்கெடுக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது.  மின்சாரத்தின் பயன்பாடு குறித்த 2 மாதங்களுக்கு ஒருமுறை ஊழியர்கள் கணக்கெடுக்கிறார்கள். இந்நிலையில் மின்வாரியத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளின் அலட்சி யப்பணியால் குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் அதிக மின்சா ரம் பயன்படுத்தி கட்டணமும் அதிகம் வருகிறது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே இவற்றை களையும் வகையில் ஆளில்லா மல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை செயல் படுத்துமாறு அனைத்து மாநில மின் வாரி யங்களையும், ஒன்றிய அரசு அறிவுறுத்தி  வருகிறது. இந்த மீட்டரில், சிம் கார்டு  பொறுத்தப்பட்டு மின் வாரிய, ‘சர்வருடன்’ இணைக்கப்படும். மின் பயன்பாடு கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும். இதனால், குறித்த தேதி வந்ததும் தானாக மின் பயன்பாடு கணக் கெடுக்கப்பட்டு, மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும். இந்த திட்டம் ஏற்கனவே சில மாநிலங்க ளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அந்தவகையில் சென்னை, தி.நகரில் 1.42 லட்சம் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பொருத்தப்பட்டுள்ள இடங்களில் மின்சாரத்தை கணக்கெடுக்க செல்லும்  ஊழியர்களுக்கு நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மின் அளவீடு  கணக்கு எடுக்கும் கருவி வழங்கப் பட்டது.