சென்னை, நவ. 28 - தேசிய குழந்தைகள் அறி வியல் மாநாடு - டிசம்பர் 27-31 தேதிகளில் அகமதா பாத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து மாண வர்கள் தங்கள் ஆய்வறிக் கைகளை சமர்ப்பிக்க உள்ள னர். இதற்காக மாவட்ட, மாநில அளவில் மாநாடுகள் நடத்தி ஆய்வறிக்கைகள் தேர்வு செய்யப்படும். இதன்படி, ஞாயிறன்று (நவ.27) கிழக்குத் தாம்ப ரத்தில் தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் தென்சென்னை மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில், 40 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இரண்டு மாணவர்கள் வீதம் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தனர். அதிலிருந்து 15 ஆய்வறிக்கைகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் மோகனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கணித அறிவியல் நிறு வனத்தின் விஞ்ஞானி முனைவர் இந்துமதி, விஞ்ஞான் பிரசார் மூத்த விஞ்ஞானி முனைவர் த.வி. வெங்கடேஷ்வரன், டாக்டர். வெ.வந்தனா, கல்லூரியின் முதல்வர் முனைவர் பால் வில்சன், இயற்பியல் துறை தலைவர் ஹானாகிளாரா அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், தேசிய குழந்தைகள் மாநாடு- 2022 மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் இளங்கோ, மாவட்ட கல்வி ஒருங்கி ணைப்பாளர் அம்பிகா, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுதாகர், இணை செயலாளர் அன்பு வாகினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.