districts

img

ஆபத்தான கழிவுநீர் தொட்டிகளால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை, டிச. 15- சாலைகளில் முறையாக அமைக் கப்படாத பாதாள சாக்கடை நீர் தொட்டிகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். தரமற்ற சாலைகள் அமைக்கப் படுவதாலும், அமைக்கப்பட்ட சாலைகளில் மின்சார வாரியம், தொலை தொடர்புத் துறை, கழிவுநீர், குடிநீர்  இணைப்பு வழங்குதல், மழைநீர் வடிகால்வாய் என பல வகைகளில் சாலைகள் தோண்டப்படுகின்றன. அப்படி தோண்டப்படும் பள்ளங் களை மீண்டும் முறையாக மூடப்படு வதில்லை.  மழைக்காலங்களில் மிக  விரைவில் சாலைகள் சேதமடை கின்றன. சாலைகளில் அமைக்கப்படும் கழிவு நீர் தொட்டிகள் சாலைக்கு சமமாக அமைக்கப்படுவதில்லை. 10 செ.மீ. வரை உயரமாகவோ அல்லது பள்ளமாகவோ உள்ளன. அதே போல் அதனுடைய மேல்மூடி (மேன்ஹோல்) தரமாக அமைக்கப் படாததால் கனரக வாகனங்கள் அதன்மீது செல்லும் போது விரைவில் சேதமடைகின்றன. இதுவே வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை போல் கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சில  நேரங்களில் விபத்துக்களும் நடை பெறுகிறது. மேலும் வாகனங்களின் உதிரி பாகங்கள் விரைவில் பழுத டைந்து வருகின்றன.

தரமற்ற சாலைகள் அமைக்கப் படுவது குறித்தோ, சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாதது குறித்தோ, கழிவுநீர் தொட்டிகள் விதிகளை பின்பற்றி அமைக்கப்படுகிறதா என்பது குறித்து நெடுஞ்சாலைத் துறையோ, மாநாகரட்சி, கழிவு நீரகற்று வாரியமோ அக்கரை கொள்வதாக தெரியவில்லை. நெடுஞ்சாலை முதல் மாநகராட்சி பிரதான சாலை, உள்ளூர் சாலை என அனைத்து சாலைகளிலும் இதே நிலைதான் காணப்படுகின்றன. எனவே சம்மந்தப்பட்ட ்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் முறையாக சாலை அமைக்கப்படுகிறதா? தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்பகிறதா? கழிவுநீர் தொட்டிகள் விதிமுறைப்படி அமைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று, தவறு செய்யும் ஒப்பந்ததாரர் மீதும், அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள் ளனர். அரசுக்கு வரி செலுத்தும் வாகன ஓட்டிகள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

;