திருவள்ளூர், பிப்.12- திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி அருகில் உள்ள அகரமேல் துணை சுகாதார நிலையத்தில் புத னன்று (பிப்.12), மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் ரூ.4.28 கோடி செலவில் 6 புதிய மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தனர். எடை குறைவான குழந்தைகளுக்கு தினந்தோறும் பால், முட்டை வழங்கும் திட்டத்தையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் பிரதாப் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), வி.ஜி. இராஜேந்திரன் (திரு வள்ளூர்), ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.