புதுச்சேரி,மே 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு உறுப்பினரும், உழவர்கரை நகர கமிட்டி செயலாளருமான ஆர். எம். ராம்ஜியின் தந்தையார் ஆர்.ராதாகிருஷ்ணன் (90) வயது மூப்பின் காரணமாக காலமானார். புதுச்சேரி பாலாஜி நகரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உட லுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநில செயற் குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், கலியமூர்த்தி, கொளஞ் சியப்பன், பிரபுராஜ், சீனிவாசன், தமிழ்ச்செல் வன், சத்யா மற்றும் நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், மாநில குழு உறுப்பினர்கள் உட்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர். முன்னதாக அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தந்தையை இழந்த ராம்ஜியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது இரங்கலையும் ஆறு தலையும் தெரிவித்துக் கொண்டார். கருவடிக்குப்பம் இடுக் காட்டில் மறைந்த ராதா கிருஷ்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது. இவர் புதுச்சேரி மின்துறையில் ஊழியராக 30 ஆண்டுகள் திறம்பட பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப் பிடத்தக்கது.