districts

img

சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

கிருஷ்ணகிரி, ஜன 2 - சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓசூர் நகரில் மையப் பகுதியில் உள்ளது சாந்தி நகர். இந்த நகரிலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையின் இருபுறமும் அரசு மருத்துவமனை, சார் ஆட்சியர் அலுவலகம், வங்கிகள், 6 தனியார் மருத்துவமனைகள், 2 பள்ளிகள், ஒரு திரையரங்கு, துணிக் கடைகள், திரு மண மண்டபங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்தச் சாலையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியின் கிழக்குப் பகுதி பிரதான சாலையிலிருந்து உள்ளே செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் பணி கள் முழுமை அடையாமல் உள்ளது. கால்வாயில் இருந்து எடுக்கப்படும் குப்பைக் கழிவுகள் சாலையிலே கொட்டப்படுகின்றன. நான்கு தெருக்களுக்கு கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்படவே இல்லை. தெருமுனைகளில் தனியார் மருத்துவமனை கழிவுகள் கொட்டப்படுகின்றன. தினசரி குப்பைக் கழிவுகள் அகற்றப்படாமல் சில இடங்களில் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தெருமுனைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை உடனே தடுக்க வேண்டும். குப்பைக் கழிவுகளை தினசரி அகற்ற வேண்டும். கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்காவிடில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாந்தி நகர் கிளை செயலாளர் மஞ்சுநாத் எச்சரித்துள்ளார்.