districts

சென்னை முக்கிய செய்திகள்

சைதாபேட்டையில்  பிரபல குற்றவாளி படுகொலை

சென்னை,மே 16- சென்னை சைதாப் பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்த கௌதம்  (வயது 27) அதே பகுதியில்  தனது மனைவி பிரியா  மற்றும் இரு குழந்தைகளு டன் வசித்து வருகிறார்.  இந்த நிலையில், புத னன்று  சுமார் 11 மணியள வில் வீட்டில் மனைவி மட்டும் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த கௌதமை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இந்த தாக்குதலில் பலத்த  காயமடைந்த கௌதம்‘ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கௌதமனின் மனைவி உட னடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சைதாப்பேட்டை காவல் துறையினர், கௌதமின் உடலை கைப்பற்றி, உடற் கூறு ஆய்விற்காக ராயப் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கௌதம் தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்ப தும், இவர் மீது கொலை உட்பட சில வழக்குகள் நிலு வையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், உயிரிழந்த கௌதமனின் மனைவி பிரியாவின் முதற்கணவரான ராஜ்கிரணுக்கும், கௌதமிற் கும் ஏற்கெனவே முன்பகை இருந்ததாகவும், அதன் காரணமாக இந்தக் கொலை  நடந்திருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தே கிக்கின்றனர். கொலை நடை பெற்ற பகுதியில் பொருத் தப்பட்டுள்ள சிசிடிவி காட்சி களை ஆராய்ந்து கொலை யாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

திருவள்ளூர், மே16- திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  சரவணன் (32) மீது கஞ்சா  விற்பனை வழக்கு நிலுவையில் உள்ளது.  இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகா மல் தலைமறைவாக இருந்த சரவ ணனை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. இந்நிலையில் வெள்ளவேடு அடுத்த  கூடப்பாக்கத்தில் கஞ்சா விற்பனை யில் ஈடுபட்டிருந்த சரவணன் (32)  என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ஏற்கெனவே கஞ்சா விற்பனை செய்த  வழக்கில் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஆஜ ராகாமல் தலைமறைவாக இருந்ததும்  தெரியவந்தது. இதனால் தேடப்படும்  குற்றவாளியாக இருந்த சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 74 பேர் கைது

சென்னை, மே 16- சென்னையில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 51 வழக்குகளில் தொடர்புடைய 74 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். செயின் பறிப்பு, வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு  மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டடது. அதன் தொடர்ச்சியாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 7 நாட்களில் செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பான 32 வழக்குகளில் தொடர்புடைய 1 இளஞ்சிறார் உட்பட 39 குற்றவாளிகள் கைது  செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 27 சவரன் நகைகள், 16 செல்போன்கள், ரூ.4லட்சத்து 10ஆயிரம் ரொக்கம் , 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடந்த 7 நாட்களில் மோட்டார் வாகன திருட்டு  தொடர்பான 19 வழக்குகளில் தொடர்புடைய 3 இளஞ்சிறார் கள் உட்பட 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை, திருட்டு, சங்கிலி பறிப்பு மற்றும்  வழிப்பறி குற்றங்களில் கைது செய்யப்பட்ட 99 குற்றவாளி கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

நகை பட்டறையில் 8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சென்னை, மே 16- வால்டாக்ஸ் ரோட்டில் நகை பட்டறை யில் பணிபுரிந்த 8 குழந்தை தொழி லாளர்கள் மீட்கப்பட்டனர். சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள தங்க நகை பட்டறையில் குழந்தை தொழி லாளர்கள் பணி புரிவதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு  தகவல் கிடைத்தது இதையடுத்து அதிகாரிகள் நகை பட்டறைகளை சோதனை செய்த னர். அப்போது அங்கு மேற்கு வங்கா ளத்தைச் சேர்ந்த 7 குழந்தை தொழி லாளர்களும், ஒடிசாவை சேர்ந்த 1 குழந்தை தொழிலாளர் பணியில் இருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு 14 வயதில் இருந்து 17 வயதுக்குள் இருக்கும். இதையடுத்து அவர்களை மீட்டு ராய புரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். குழந்தை தொழி லாளர்களை பணியில் அமர்த்திய நகை பட்டறை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி  சுவர் அமைக்க அறிவுரை

காஞ்சிபுரம், மே.16 - பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் , நீர் தேக்கங்கள் , நீர் ஆதாரங்கள் ஆகியவையில் தவறான நபர்கள் மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இது பல்வேறு பிரச்சனைகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் உள்ள நீர் ஆதாரங்கள் மற்றும் விநியோக கட்டமைப்புகளின் பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் நீர் ஆதாரங்கள், மேல்நிலை தொட்டிகள், பம்புகள் உள்ள பகுதிகளில் சுற்று சுவர் அல்லது உயரமான வேலி அமைத்து அவற்றை பூட்டி உள்ளாட்சிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிக்கு செல்லும் ஏணியை தகடு அமைத்து அதை பூட்டிக் கொள்ள வேண்டும் எனவும் , இதனை ஊராட்சிகள் செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும், மேலும் இதற்கான நிதிகளை பஞ்சாயத்து பொது நிதி மற்றும் கனிமவள நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை பயன்படுத்தி விரைவில் முடிக்க அறிவுறுத்தி உள்ளார். இதனால் கசப்பான சம்பவங்களை தவிர்க்கலாம் எனவும் பாதுகாப்பான குடிநீர் வழங்க ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகதியில் துணைவேந்தரை நியமிக்க  முயலும் ஒன்றிய  உயர் கல்வித்துறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

புதுச்சேரி, மே16- புதுச்சேரி மத்திய பல்கலைக்கழ கத்திற்கு அவசரகதியில் துணை வேந்தரை நியமிக்க முயலும்  உயர் கல்வித்துறையின் நடவடிக்கையை  தலைமைத் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம், மத்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:- இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை யானது,  மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் மத்திய நிதி யுதவி பெற்று நிர்வகிக்கப்படும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான துணைவேந்தர்கள், இயக்குநர்கள் நிய மனங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான நேர்காணலை மே.17 அன்று  நடத்திட கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தியினை அறிந்தோம். நாட்டில் பொதுத்தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது, நடை முறையில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிகள், இத்தகைய நிய மனங்களைத் அனுமதிக்காது என்ப தால் இது மிகவும் கவலைய ளிக்கிறது. புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சி, குறிப்பாக தற்போதைய அர சாங்கத்தின் இறுதி நாட்களில், பொதுத் தேர்தல்கள் இன்னும் 3 வாரங்களில் முடிவடையும் பின்னணியில் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.  புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு துணைவேந்தர் நியமனம்,  2024 ஜூன் 5ம் தேதிக்குள் செய்ய வேண்டிய அவசர அவசியம் ஏதும் இல்லாத தால், இந்த விஷயத்தில் தாங்கள் தயவுசெய்து தலையிட்டு, மாதிரி நடத்தை விதிகள் நீக்கப்படும் வரை நேர்காணலை நடத்துவதை தவிர்க்குமாறு இந்திய அரசின் கல்வித்துறைக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விபத்தில் காயமுற்ற தொழிலாளர்களுக்கு அமைச்சர் ஆறுதல்

ராணிப்பேட்டை,மே 16– சென்னை நோக்கி தனி யார் நிறுவனத்தின் தொழி லாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ராணிப் பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை  சுங்கச் சாவடி அருகே வியாழ னன்று (மே.16) முன்னால் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளா னது. இதில் ஓட்டுநர் உட்பட 18 தொழிலாளர்கள் படு காயமடைந்தனர்.அவர்களை உடனடியாக மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை அமைச்சர் ஆர். காந்தி, ஆட்சியர் ச.வளர்மதி ஆகியோர் ஆறுதல் கூறினர்.

 

;