districts

img

ஓசூரில் தியாகிகள் தின கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி ஜனவரி 21- தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஓசூர் சிஐடியு அலுவலகத்தில் தோழர் லெனின் நூற்றாண்டு தினம்,தியாகிகள் தின கருத்தரங்கம் நடைபெற்றது.  மாபெரும் புரட்சியாளர்,உலகில் முதல் சோசலிசை முகாமை உருவாக்கிய  தோழர்.லெனின் நூற்றாண்டு நினைவு,மற்றும் ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத்திலும் பிரிக்கப்பட்ட பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத் திலும் தொழிற்சங்கங்களை, மாவட்ட சிஐடியு சங்கத்தை,இடதுசாரி இயக்கத்தை மாபெரும் இயக்கமாக உருவாக்கிய தோழர்.கே.எம்.ஹரிபட் நினைவு கருத்தரங்கம்  நடைபெற்றது. மாநில உதவி பொதுச் செயலாளர்  வி.குமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர்,துணைத் தலைவர்கள் பி.ஜி.மூர்த்தி, கிருஷ்ணப்பா முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கோவிந்தம்மாள், இணைச் செயலாளர்கள் தேவி, கஸ்தூரி,  குருநாதன் அசோக் லேலண்ட் சிஐடியு  அணி நிர்வாகிகள் பெத்து முருகேசன், தரணியன் வேலு கலந்து கொண்டனர். கருத்தரங்கில் சிஐடியு சங்கத்தை கட்டுவதற்கான போராட்டத்தில் நிர்வாக தூண்டுதலால் கொலை செய்யப்பட்ட அசோக் லேலண்ட் தொழிலாளி தோழர் சக்திவேல், சங்கத்திற்காக உழைத்து மறைந்த சிஐடியு மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.சேகர் ஆகியோரை தலைவர்கள் நினைவுகூர்ந்தனர்.