புதுச்சேரி, ஜூலை 27-
மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்ச்சியை கண்டித்து புதுச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி-வில்லியனூர் புறவழிச் சாலை, எம்.ஜி.ஆர் சிலை அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணி, வில்லி யனூர் - நெட்டப்பாக்கம் கொம்யூன் தலை வர் சின்னதுரை தலைமை தாங்கினார். முன்னணியின் புதுச்சேரி தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் வழக்கறி ஞர் ஆர். சரவணன், முன்னாள் செய லாளர் ராமசாமி, சிபிஎம் கொம்யூன் செய லாளர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர். மாநில நிர்வாகிகள் உமா சாந்தி, சத்யா, குப்புசாமி, கந்தன், செங்குளத்தான், இன்னரசன், முருகையன் உட்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.