கிருஷ்ணகிரி, மார்ச் 27- இந்தியா கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் அறிமுக கூட்டம் கிருஷ்ண கிரியில் நடைபெற்றது. திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப் வரவேற்றார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், சிபிஐ மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்எல்ஏ, மதிமுக செயலா ளர் பாலமுரளி, விசிக செயலாளர்கள் மாதேஷ், முஸ்லிம் லீக் தலைவர் முகமது உமர், திக மாவட்ட தலைவர் திராவிட மணி, மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் முருகேஷ், ஆதித்தமிழர் பேரவை தலைவர் கோவிந்தன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் நூர் முகமது முன்னிலை வகித்தனர். அமைச்சர் அர. சக்கரபாணி, கிருஷ்ண கிரி வேட்பாளர் கே.கோபி நாத்தை அறிமுகப் படுத்தி பேசினார். மக்க ளவைத்தொகுதி திமுக பொறுப்பாளர் இளங் கோவன், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், நிர்வாகிகள் விஜய், சீனிவாசன், அரியப்பன் கலந்து கொண்டனர். நிறைவாக நகரின் மையப்பகுதியில் இந்தியா கூட்டணி தேர்தல் அலுவல கத்தை அமைச்சர் அர. சக்கரபாணி திறந்து வைத் தார்.