districts

img

அடிப்படை வசதிகள் இல்லாத கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம்

கிருஷ்ணகிரி, மே 18- மாவட்டத்தின் தலை நகரான கிருஷ்ணகிரியில் நகர பேருந்து நிலையம் உருவாகி 25 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை சீர்படுத்தப்படாமலும் பராமரிக்கப்படாமலும் உள்ளது. இங்குள்ள 42 கடைகளில் பெரும்பாலான கடைகள் மேல் தளம், பழுதுபட்டு காரைகள் உடைந்தும் மழை காலத்தில் நீர் கசிந்து கடைகளுக்குள் ஒழுகுகிறது. பலமுறை  கடையின் மேற்கூரை யில் உள்ள பூச்சு இடிந்து  கடைகாரர்கள் தலையில் விழுந்துள்ளது. இதனால் மழை பெய்தாலே வியா பாரிகள் பலர் கடைகளை மூடி விட்டு சென்று விடுவார் கள். கடைகளுக்கு முன்பு போடப்பட்டுள்ள தகர சீட்டு பந்தல் “பந்தல் மாதிரி” உள்ளது. பொது மக்கள் இதன் கீழே மழைக்காக நிற்க முடிவதில்லை. பெரும்பாலான இடங்களில் மழைநீர் ஒழுகுகிறது. நகரப்பேருந்துகள் நிற்கும் பகுதியில் சிறுமழை பெய்தாலே சுமார் 2 அடி  வரை மழை நீர் ஏரி போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதோடு கழிவு நீரோடு  சேர்ந்து விடுகிறது. பார்ப்பதற்கு ஏரிக்குள் தத்தளிக்கும் பேருந்து நிலையம் போல் காட்சி யளிக்கிறது. தேங்கிடும்  மழை நீர் வடிவதற்கு  குறைந்தபட்சம் 4 மணி  நேரமாகும் என கடைக் காரர்கள் கூறுகின்றனர். நகர பேருந்து நிலையத் தின் வெளியில் உள்ள சாலையின் கால்வாய் மேடாக உள்ளதால் தண்ணீர் வடிய வழியில்லை. பேருந்து நிலையத்துக் குள் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவு நீர்  கால்வாய் தூர்ந்து மேடாகி  தரையோடு தரையாக இருக்கிறது. மழை பெய்தாலே பேருந்துகள் உள்ளே நுழை யும் பகுதியிலேயே நிறுத் தப்படுகிறது. இதனால் மக்கள் மழையில் நனைந்து  கொண்டு,தேங்கி நிற்கும் தண்ணீரில் இறங்கி செல்ல  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றாய் இருந்த தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி நகர  பேருந்து நிலையம்  நவீன வசதிகளுடன் அமைக்க வேண்டும்  என்று  25 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் 16 நாட்கள் சாகும் வரை உண்ணா நிலை போராட்டம் நடத்தப்பட்டது. அதனால் இப்பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது.  ஆனால் அன்றிலிருந்து இன்று வரை  பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யப்பட வில்லை, கழிவு நீர் கால்வாய் இலவச சிறுநீர் கழிப்பிடம், பயணிகள் அமர்வதற்கான நாற்காலி கள் உட்பட எந்த வசதிகளும் செய்யப்படவில்லை. எனவே பேருந்து நிலை யத்தில் சரியான கழிவு நீர் கால்வாய், இலவச சிறுநீர் கழிப்பிடம் கட்டப்பட வேண்டும்,  பேருந்துகள் நிற்கும் தரையை உயர்த்தி மழை காலத்தில் தண்ணீர் தேங்காமல் மழை நீரும் கழிவு நீரும் கால்வாய்க்கு செல்லும் வகையில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.  - ஒய்.சந்திரன்

;