சிதம்பரம், ஆக. 14-
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், என்னா நகரம் கிராமத்தில் வறுமை கோடு பட்டியல் தயாரிப் பில் அரசு ஊழியர்கள், பணக்கார விவசாயிகள் பெயர்கள் இடம் பெற்றுள் ளது. அதே நேரத்தில், ஏழை- எளிய கூலித் தொழிலாளிகள் பெரும்பாலோனார் பெயர்கள் விடுபட்டுள்ளது.
இந்த நிலையில், பாதிக் கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தை முற்றுகையிட்ட னர். இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றியக் குழு உறுப்பினர் சிவராமன் தலைமை தாங்கி னார். மாவட்டக் குழு உறுப் பினர் வாஞ்சிநாதன், ஒன்றி யச் செயலாளர் செல் லையா, நெடுஞ்சேரலாதன், முருகன் சோமசுந்தரம், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கவியரசன், கிளைச் செயலாளர் மாய வேல் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் நாவுக்கரசன், லெனின் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பழனிச்சாமி, ஆறுமுகம், தையல்நாயகி, சாந்தி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.