கிருஷ்ணகிரி, மார்ச் 27- இந்தியா கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் அறிமுக கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செய லாளர் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் அர.சக்கரபாணி வேட்பாளர் கோபிநாத்தை அறிமுகப்படுத்தினார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்.ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா துணை மேயர் ஆனந்தய்யா ,வேப்பனப்பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன்,காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளி,மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செய லாளர் சட்டமன்ற உறுப்பினர் ராமச் சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் மாதையன், உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஓசூர் தேர்தல்அலுவலகத்தை வேட்பாளர் கோபிநாத் திறந்து வைத்தார்.