districts

img

மாநகராட்சி வசதிகளை க்யூஆர் கோடு அட்டைகள் கடலூர் மாநகராட்சியில் அறிமுகம்

கடலூர், ஜூலை.8-

    மாநகராட்சியில் வசதி களை பெறுவதற்கு கியூ ஆர் கோடு  அட்டைகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வழங்கி தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி, கடலூர் மாநகராட்சி பகுதியில், பொதுமக்கள் தங்களின் சேவைகளை பெற, அதா வது குப்பைகள் அகற்றுதல், கால்வாய் சுத்தம் செய்தல், தெருவிளக்கு எரிய வைத் தல், சாலை பராமரிப்பு, பாதாள சாக்கடை சுத்தம்  செய்தல், வரி செலுத்து தல் உள்ளிட்ட சேவைகளை பெற, பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகம் வந்து புகார் தெரிவிக்க  சிரமப்பட வேண்டி யிருக்கும். பொதுமக்களின் அந்த சிரமங்களை குறைக்க, தற்போது QR code என்னும் அட்டையை அனைத்து வீடுகளிலும் கடலூர் மாநகராட்சி சார்பாக ஒட்டப்பட்டு வருகின்றது.

    இந்த பணி யானது, ஏற்கெனவே கடலூர்  மாநகராட்சியின் 1 ஆவது  வார்டில், நிறைவு பெற்றுள்ளது. தற்போது கடலூரில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள அனைத்து வீடுகளிலும் QR code ஒட்டும் பணி துவங்கப்பட உள்ளது.

   கடலூர் மாநகராட்சி முழு வதும், 33000 அட்டைகள் ஒட்டப்பட உள்ளது.  தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களைக் கொண்டு இப்பணி செயல்படுத்த பட உள்ளது. இப்பணியினை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா QR Code அட்டை களை வழங்கி துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர் நல அலுவலர் அப்துல் ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.