districts

img

படப்பையில் ஆட்டோ சங்க பெயர் பலகை திறப்பு விழா

காஞ்சிபுரம், ஜூன் 3 - காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட படைப்பை பஜாரில், ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு தோழர் வி.பி.சிந்தன் ஆட்டோ ஓட்டுநர் படப்பை - ஒரகடம் வட்டார சங்கம் திறப்பு விழா எஸ்.பூபாலன், எம்.சிவா தலைமையில் நடைபெற்றது.  சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பி.ரமேஷ் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட பொருளாளர் ஆர்.மதுசூதனன் சங்கப் பெயர் பலகையை திறந்து வைத்தார். கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ஆர்.கார்த்திக், சிஐடியு குன்றத்தூர்  வட்ட நிர்வாகிகள் ஆர்.நந்தகோபால், அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின்  மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பி அரவிந்தன், கே.சரவணன் டி.ஜெய்சங்கர், வட்டார நிர்வாகிகள் இ.இளவரசன், பி.கண்ணன், பி.மணியரசு, எஸ்.செல்வம், பி.பச்சையப்பன், ஜி.ரமேஷ், ஏ.கோவிந்தராஜ், இ.nஜகதீசன் வி.துரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;