districts

img

மருத்துவ சேவைகள் வழங்குவதில் முன்னணி மாநிலம் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை, நவ.13- தமிழ்நாடு மருத்துவ சேவைகளை வழங்கி வருவதில் எப்போதும் முன்னணி யில் உள்ளது என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். சென்னையில் சனிக்கிழமை நடை பெற்ற இந்திய தொழில் வர்த்தக சபை சங்கங்களின் சம்மேளனமாக ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த சுகாதாரத்துறை மாநாடு மற்றும் சிறப்பாக செயல்பட்ட மருத்துவ மனைகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.  மருத்துவத்துறையில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு காண்பதில் அரசு, தனியார் மற்றும் இதர சுகாதார துறை களை சேர்ந்தவர்கள் பல்வேறு புதிய சாதனைகளை தடம் பதித்து வருகின்றனர். மருத்துவத்துறையில் புத்தாக்க நிறு வனங்கள் (ஸ்டார்ட் அப்) வருவதை முழு மனதுடன் மாநில அரசு  வரவேற்கிறது. தமிழ்நாடு சுகாதார துறை ஃபிக்கியுடன் இணைந்து புத்தாக்க நிறுவனங்களின் மையங்கள் (இன்குபேட்டர்கள்), வணிக பங்குதாரர்கள் உள்ளிட்டவைகளுன் ஒருங்கிணைந்து சுகாதார துறை புத்தாக்க நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த சூழல் அமைப்பை விரைவாக நிறுவ உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். முன்னதாக கொரோனோ காலத்தில் அதிகளவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு விருது வழங்கப்பட்டது. இதனை மருத்துவக்கல்வி இயக்குநர் மருத்துவர் சாந்தி மலர், மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் தேரணிராஜன் ஆகியோர்  பெற்றுக்கொண்டார்.  சிறந்த மாவட்ட மருத்துவமனை விருது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.  இதே போன்று சிறப்பாக சேவை யாற்றிய அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்சியில் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) தமிழ்நாடு பிரிவு  தலைவர் டாக்டர்  ஜி.எஸ்.கே.வேலு, ஃபிக்கி சுகா தார பிரிவின் ஒருங்கிணைப்பாளரும், எம்.ஜி.எம். மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.