சென்னை,ஆக,18-
இந்தியாவில் கோவை உள்பட 10 இடங்களில் பிரமாண்ட ஷோரூம்களை திறக்க செல்போன் உற்பத்தியில் முன்ன ணியில் உள்ள விவோ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாகவும் ஆமதாபாத்தில் 3 மாடிகளுடன் 7ஆயிரம் சதுர அடியில் தனது பிரமாண்ட ஸ்டோரை இந்நிறுவனம் திறந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் புதிய தயாரிப்புகளை பார்த்து அவற்றின் சிறப்புகளை அறிந்து வாங்க சிறந்ததொரு அனுபவம் கிடைக்கும் என்று விவோ இந்திய நிறுவன கார்ப்பரேட் ஆலோசனைப் பிரிவு தலைவர் கீதஜ் சன்னனா கூறியுள்ளார்.