districts

img

ஆட்டுக் கொல்லி நோயிலிருந்து ஆடுகளை பாதுகாப்பது எப்படி?

ராணிப்பேட்டை, ஏப். 27 – ஆடுகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது 4 மாதத்திற்கு குறைவான வயதுள்ள ஆட்டுக் குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடு கள் நீங்கலாக மற்ற அனைத்து ஆடுகளுக்கும் தவறாமல் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ளாடுகள், செம்மறியாடு களை தாக்கும் முக்கிய நோய்களில்  ஆட்டுக்கொல்லி (Peste des petits ruminants) ஒன்றாகும். இந்நோய்  மிக கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. இக்கிருமியானது நோய் பாதித்த ஆடுகளின் சிறு நீர், கண்ணீர் மற்றும் சாணம் ஆகிய வற்றின் மூலம் மிக விரைவில் பரவக் கூடியது. இந்நோயினால் பாதிக்கப் பட்ட வெள்ளாடுகள், செம்மறியாடு களின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளி லும் புண்கள் ஏற்படும். நோயினால் அவதிப்படும் ஆடுகளின் கண்கள், மூக்கு மற்றும் வாயிலிருந்து நீர் வடியும், தும்மல் மற்றும் இருமல் பிறகு ஆரம்பிக்கும். அவைகள் தீனி  உட்கொள்ள முடியாமல் மெலிந்து விடும். வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட வெள்ளாடுகள், செம் மறியாடுகளுக்கு மூச்சிரைக்கும், காய்ச்சல் வரும், இறுதியில் கழிச்சல்  கண்டு ஆடுகள் இறந்துபோகும். நோய் தாக்கிய ஆடுகளில் நோயின் அறிகுறிகள் 6 நாட்களுக்கு இருக் கும். குட்டிகளில் அதிக இறப்பு ஏற்படும். இதனால் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வளர்ப்போர்க்கு மிக பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, இந்நோய் தாக்காத வண்ணம் வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு வருடத்திற்கு ஒரு முறை தடுப்பூசிப் போடுவது ஒன்றே சிறந்த நிவாரணம். இம்மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையினரால் கால் நடை நலம் மற்றும் நோய் தடுப்புத்  திட்டத்தின் கீழ் ஆட்டுக் கொல்லி  நோய் ஒழிப்புத் திட்டத்தின் தடுப்பூசிப்பணிகள் ஏப். 29  முதல்  தொடங்கி 30 நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள 1.54 லட்சம்  வெள்ளாடுகள், செம்மறியாடு களுக்கு ஆட்டுக் கொல்லி நோய்  தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள் ளது. மேலும், தேசிய மின்னணு கால்நடை இயக்க தரவுகளின்படி தடுப்பூசி போடப்படும் அனைத்து ஆடுகளுக்கும் பார்கோடுடன் கூடிய காதுவில்லைகள் அணிவித்து பாரத் பசுதான் செயலியில் தடுப்பூசி  போடப்பட்ட ஆடுகள் விவரங்கள்,  உரிமையாளர்கள் விவரங்கள் பதிவு  செய்யப்படும். இதற்காக பிரத்யேக மாக வழங்கப்பட்ட வெளிறிய ஊதா  நிற காதுவில்லைகள் ஆட்டினங் களுக்கு அணிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார்.