கடலூர், மார்ச் 29- சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து போக கூட ஆளில்லாதவர்களுக்கு அவர்கள் கேட்ட சின்னம் எப்படி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கூறினார். கடலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர்,. மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் மட்டும் நின்றால் பொது சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் காரணம் தெரிவித்துள்ளது. இரண்டு நாடாளுமன்ற தொகுதி யில் நிற்கும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு பானை சின்னம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் பாஜக விடம் வாட கைக்கு எடுக்கப்பட்டுள்ள சைக்கிள் தான் அது. கேரியரில் உட்கார்ந்து போக கூட ஆளில்லா தவர்களுக்கு அவர்கள் கேட்ட சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் மிகவும் சின்னத் தனமாக நடந்து கொள்கிறது. செல்லாகாசாகிவிடுவார் கடலூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் தங்கர் பச்சான், பாமக வேட்பாளராக இருந்தாலும் எனக்கு என்று தனி சுயேட்சையான கொள்கை உள்ளது என்று சொல்கிறார். இந்த தேர்தலில் அவர் எழுதிய ஒன்பது ரூபாய் நோட்டு புத்தகம் போல் அவரும் செல்லாக்காசாகி விடுவார். சமூகநீதிக்கு துரோகம் இட ஒதுக்கீட்டுக்காக மிகப் பெரிய இயக்கத்தை நடத்தியவர் ராமதாஸ் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அவர் கேட்கிறார். ஆனால் அவர்கள் கூட்டணி சேர்ந்திருக்கின்ற பாஜக இட ஒதுக்கீடே கூடாது என்கின்றது. யார் பிரதமர் ஆக வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் இந்த தேர்தலில் முக்கிய கேள்வி. அதிமுகவில் யாராவது வெற்றி பெற்றால் அவருடைய வாக்கு யாருக்கு செல்லும் மறைமுகமாக பாஜகவிற்கு தானே என்றும் மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி கூறினார். புதுப்பாளையத்தில் நடை பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆர். பஞ்சாட்சரம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், எம். மருதவாணன், வி. உதயகுமார், பி. கருப்பையன், வி.சுப்பராயன், ஜே. ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஆர்.ஆளவந்தார், சிவ காமி, டி. கிருஷ்ணன், ஆர். கே.சரவணன், எஸ்.கே.பக்கீரான் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சிகளின் சார்பில் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன், காங்கிரஸ் கட்சி யின் மாநில துணைத்தலைவர் ஏ.எஸ். சந்திரசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாண வரணி நிர்வாகி அருள் பாபு, மற்றும் ரஹீம், எழிலேந்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். சிப்காட் பகுதி செயலாளர் எம். சிவானந்தம் நன்றி கூறினார்.