சென்னையில் ஞாயிறு தோறும் ‘ஹாப்பி ஸ்டீர்ட்ஸ்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஞாயிறன்று (அக்.2) லஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்வில் ‘போதையற்ற பாதுகாப்பான உலகை படைத்திடுவோம்! எதிர்கால தலைமுறையை பாதுகாப்போம்!’ எனும் விழிப்புணர்வு முழக்கத்தோடு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கலந்து கொண்டது. இந்நிகழ்வில் விழிப்புணர்வு பதாகையில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு கையெழுத்திட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.