சென்னை, நவ. 21- வணிகர்களின் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர் செலுத்தும் வாடகைக்கும், வணிக கட்டிடங்களுக் கான வாடகை பெறுபவருக்கும் ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக உணவக கட்டிடங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை உணவக வணி கர்கள் 2017இல் இருந்து செலுத்தி வருகிறார்கள். அதை திரும்பப்பெற நிதியமைச்சருக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. இணக்க வரி செலுத்தும் வணிகர்கள் இதுநாள் வரை இந்த நடைமுறையை பின்பற்றி வந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி. வரிவிதிப்பு வரம்பு என்பது ஆண்டு வருமானம் 20 லட்சத்துக்கும் குறைவாக வாடகை வரு மானம் உள்ள கட்டிட உரிமையாளர் களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் 40 லட்சம் வரை விற்று வரவு செய்யும் வணிகர்களுக் கும் ஜிஎஸ்டி பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறையில் கட்டிட உரிமையாளரும் வணிகம் செய்ப வரும் வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. தற்போது 10.10.2024 முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு எண்.9/2024 அறிவிப்பின்படி சிறு குறு மற்றும் நடுத்தர வணிகர்களும் வாடகை மீதான ஜிஎஸ்டி சேவை வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி சட்டங்கள் அறிவிக்கப் பட்டு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து 907 சட்ட திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரி விதிப்பிலேயே எண்ணற்ற குளறு படிகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த சட்ட நடைமுறை களை படித்து தெரிந்து ஆய்வு செய்து பின்பற்றுவதற்கு கல்வி பின்புலம் கொண்டவர்களுக்கே மிகக் கடின மான ஒன்று என்பதோடு, ஜிஎஸ்டி இணையதள சேவை நடைமுறையில் அவ்வப்போது குறைபாடுகள் இருப்பதும் தெரிய வருகிறது. ஓட்டு மொத்தமாக வணிக சேவை என்பது பொதுமக்கள் நலன் சார்ந்த ஒன்று என்பதோடு, அரசுக்கு ஊதியம் இன்றி வருவாய் ஈட்டித்தரும் முதலாளிகள் மட்டுமல்ல, உழைப்பாளிகளும் என்பதை ஒன்றிய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி மாற்றங்கள் கொண்டு வரும்போதும் வரி சம்பந்தமாக முடிவுகள் எடுக்கும் முன்னரும் வணிகர்கள் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளோடு கலந்தாய்வு செய்து பின்னர் நடை முறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் நீண்ட கால கோரிக்கை. தற்போது அறிவிக்கப்பட்ட வாடகை மீதான சேவை வரியை முறையாக மறு ஆய்வு செய்து வணிகர்களோடு கலந்து பேசி அதன் பின்னர் அமல்படுத்த வணி கர் பேரமைப்பு வலியுறுத்துகிறது. உரிய தீர்வுகள் எட்டப்படாவிடில் இணைப்புச் சங்கங்கள் மற்றும் ஆட்சி மன்ற குழு ஒப்புதல் பெற்று ஆர்ப் பாட்டம், போராட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.