விழுப்புரம்,டிச.20- விழுப்புரத்தில்ல் கடந்த 2019 ல் தொடங்கப்பட்ட விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் படித்து முடித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு திங்களன்று(டிச.20) நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், 45 மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கினார். முன்னதாக சட்டக் கல்லூரி முதல்வர் ந.கயல்விழி அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.