districts

அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி, டிச 18- ஊதிய நிலுவைத் தொகை மற்றும் ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கனியமூர் தனி யார் பள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,500 மாணவ - மாணவிகள் பயில்கின்றனர். இங்கு பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாத ஊதியமும், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான நடைமுறை கால ஊதிய மும், நிலுவை ஊதியமும் வழங்கப்பட வில்லை. இவற்றை வழங்க வலி யுறுத்தி வெள்ளியன்று (டிச.18) கல்லூரியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

;