சென்னை,மே 12- அரசு சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த நன்மைகள் மற்றும் அதை கடைபிடிக்கத் தவறுவதால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், அவ்வப்போது சில தனி யார் நிறுவனங்களுடன் இணைந்தும் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த வகை யில், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கான ஒரு புதுமையான அணுகு முறையில் உர்பசேர் சுமீத் மற்றும் தனியார் வானொலி உடன் இணைந்து “Kuppai in Bin, Let’s make Chennai win” என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், கிரிக்கெட் போட்டியைக் காண வரும் கிரிக்கெட் ரசிகர்களிடம், திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருநகர சென்னை மாநக ராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திடக்கழிவு மேம்பாடு குறித்த விழிப்புணர்வு வழங்கினார். முன்னதாக, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார். பணியாளர்களுக்கு பாராட்டு அதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், “சென்னை பெருநகரைப் பொறுத்தவரை, ஒரு நாளுக்கு 6 ஆயிரத்து 300 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக குப்பை சேர்கிறது. இது போன்று சேரும் குப்பைகளை அகற்றும் பணியில் ஆண், பெண் என பலர் இரவு பகலாக உழைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் குறித்தும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். அதனால், குப்பைகளை மொத்தமாக கொட்டாமல், தரம் பிரித்து கொட்ட வேண்டும். மேலும், குப்பைகளை தரம் பிரித்து வெளியேற்றுவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். மேலும், பொது இடங்களில் குப்பை களைக் கொட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.