districts

img

மலேசியா செல்லும் இந்தியர்களுக்கான இலவச விசா 2026 டிச.31 வரை நீட்டிப்பு

சென்னை, ஜன.13- மலேசியா செல்லும் இந்திய பயணிகளுக்கான 30 நாட்கள் இலவச விசா, வரும் 2026 டிச.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் துணை தூதர் சரவணக்குமார் குமார வாசகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், இந்தியா - மலேசியா இடையில் நல்ல நட்புறவு நீடித்து வரு கிறது. குறிப்பாக உல களவில் இருந்து மலேசியா வுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை யில் சிங்கப்பூர், இந்தோ னேசியா, சீனா, தாய்லாந்து நாடுகளை தொடர்ந்து இந்தியா 5-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த 2023 டிசம்பர் மாதம், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாட்களுக்கான இலவச விசா மலேசிய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கடந்த ஓராண்டில் (2024) மட்டும் இந்தியாவில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணி கள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனர். இதில் 71.7 விழுக்காடு தென் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மலேசியா சுற்றுலாத்துறையில் தமிழகம் மிகவும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மலேசியாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளை ஊக்கு விக்கும் வகையில் 30 நாட்க ளுக்கான இலவச விசா வரும் 2026 டிச.31-ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப் பட்டுள்ளது என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது மலேசியா சுற்றுலாத்துறை இயக்குநர் ஹிஷாமுதின் முஸ்தபா மலேசியா குடி யுரிமை அதிகாரி சுக்மா வதி பிந்தி முகமது இட்ரிஸ், மலேசியா சுற்றுலாத்துறை யின் சந்தைப்படுத்துதல் பிரிவு (சென்னை) அதிகாரி சயீத் அன்வர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.