districts

img

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி, 5 ஜி சேவையை வழங்கிடுக சென்னையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 6-

     பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு உடனே 4 ஜி, 5ஜி சேவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை பூக்கடை பிஎஸ் என்எல் அலுவலக வளா கத்தில் வியாழனன்று (ஜூலை 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அனைத்திந்திய பிஎஸ் என்எல் டாட் ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநிலத் தலை வர் வி.குப்பன், சஞ்சார் நிகாம் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளவரசன், தமிழ்நாடு பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கங்கா தரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  

   மாநிலச் செயலாளர்கள் கே.கோவிந்தராஜ், பி.சார்லஸ், எம்.சுப்பிர மணியன், எஸ்.லிங்க மூர்த்தி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசி னர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு உடனே 4 ஜி, 5ஜி சேவையை வழங்க வேண்டும், பிஎஸ்என்எல், ரயில்வே, 1.1.2017 முதல் வழங்க வேண்டிய ஓய்வூ தியத்தை மாற்றி அமைக்க வேண்டும், ரயில்வே, பாது காப்புத்துறை, இன்சூ ரன்ஸ், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண் டும், அத்தியாவசிய பொருட் களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோலியப் பொருட் களின் மீதான கலால் வரி களை ஒன்றிய, மாநில அரசு கள் குறைக்க வேண்டும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய மருத்துவச் சலுகைகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.