கிருஷ்ணகிரி, டிச 12- தமிழகத்தில் காய்கறி பூக்கள் சாகு படியை அடுத்து நிலக்கடலை துவரை மொச்சை, அவரை உட்பட மானாவாரி பயிர் சாகுபடியி லும் குறிப்பாக கேழ்வரகு பயிர் சாகுபடியிலும் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் டன் ராகி மகசூல் கிடைத்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் 37 ஆயிரம் டன் அதிக மகசூலும் கிடைத்தது. குளம், கால்வாய்கள் 10 ஆண்டு களுக்கும் மேலாக தூர்வாரி, சீரமைக்கப்படா மல் ஆக்கிரமிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக பெய்த கன மழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சில ஏரிகளைத் தவிர அனைத்தும் நிரம்பிவிட்டன. இதனால், உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், பல கிராமங்களை சூழ்ந்துகொண்டது. மேலும், மாவட்டம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துவிழுந்தன. ஆறு, ஏரி, கால்வாய் பாசன பகுதிகள், வயல்-காடுகள் அனைத்தும் நிரம்பி இப்போதும் தண்ணீர் வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. பல நாட்களாக உள்ளதால் பச்சை பாசிகள் படர்ந்துள்ளது.
மறுபுறத்தில், விவசாயப் பயிர்களும் நீரில் மூழ்கி சேதமானதால் விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை வட்டத்தில் சாகுபடி செய்த ராகி சுமார் 50 ஆயிரம் ஏக்கர், வேர்கடலை 30 ஆயிரம் ஏக்கர், ஊடு பயிராக மானவாரி நிலத்தில் துவரை, அவரை, காராமணி, சோளம், கம்பு போன்ற பயிர்க ளும் அறுவடைக்கு தயாராக இருந்தன. குறிப்பாக ஒரு சில பகுதிகளில் அறு வடை செய்து களத்துமேட்டில் தயாராக இருந்த ராகி மூட்டைகளும், பல இடங்க ளில் அறுவடைக்கு முன்பே மழையில் நனைந்து, நீரில் மூழ்கி முளைத்துப் போனது. இதனால் நொகனூர் வெங்கடேஷ், உச்சனப்பள்ளி கணேஷ், சந்தனபள்ளி மணி, தேன்கனிக்கோட்டை முத்தப்பா ,அன்னையப்பா, லட்சுமய்யா, சின்னஅன்னையா உட்பட நூற்றுக் கணக்கான விவசாயிகள் பாதித்துள்ளனர். இதேபோல் தக்காளி, கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெண்டைக்காய், கொத்தமல்லி, முள்ளங்கியும் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தன. இந்த காய்-கனிகளும் அறுவடை செய்து தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த நிலையில், கனமழை வெள்ளதால் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி வீணாகிபோனது.
அதேபோல் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உயர்ந்த ரக மலர் சாகுபடி 2 ஆயிரம் ஏக்கரில் பசுமைகுடில் விவசாயமும் செய்யப்பட்டிருந்தது. அதுவும் சேதமானது. கால்நடைகளுக்கு தீவனமான வைகோலுக்கும் கூட வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அதிகாரிகள் காலதாமம் செய்து வருகிறார்கள். இந்த பணியை துரிதப்படுதி பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தேன்கனிக் கோட்டை வட்டச் செயலாளர் அனுமப்பா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியருக்கும் அமைச்சருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.