மேல்மலையனூர்,டிச.9- விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டத்தில் கனமழையால் பாதிக்கபட்ட அனைத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் வி.எய்யில்ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நெல் சாகுபடி செய்து முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், மாநில அரசு கோரியுள்ள பேரிடர் நிதியை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.