districts

img

பொதுப்பாதையை மறித்து சுற்றுசுவர்!

விழுப்புரம், நவ.8- விழுப்புரம் மாவட்டம், கெடாரில்  விவ சாயிகள் பயன்படுத்தும் பொதுப் பாதையை மறித்து கல்வித்துறையினர் சுற்றுச்சுவர் கட்டி வருவதை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி. முருகன் தலைமையில் சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிர மணியன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ராஜேந்திரன், வட்ட செயலாளர் எஸ்.கணபதி, ஒன்றிய செயலாளர் ராஜீவ்காந்தி, விவசாய சங்க நிர்வாகி கள் மாவட்ட பொருளாளர் பி.சிவராமன், மாவட்ட துணை செயலாளர் ஏ.நாக ராஜன், பள்ளியந்தூர் ராமமூர்த்தி, சடையப்பன், ராஜாராம் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் பழனியை வெள்ளியன்று (நவ.8) சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் விழுப்புரம் மாவட்டம், கெடார் கிராம எல்லையில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசு தோப்பு புறம்போக்கில், மாதிரிப்பள்ளி கட்டப்பட்டு வருகிறது, இந்நிலையில், பள்ளியந்தூர், அரியலூர் திருக்கை கிராம விவசாயிகளின் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று வரக்கூடிய சாலையாக அந்த இடத்தை பயன்படுத்தி வந்தனர். மேலும் அங்கு கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் வெங்கட்ட நாயக்கர் குட்டைக்கும் செல்லும் சாலையாகவும் உள்ளது. இந்நிலையில், தற்சமயம், மாதிரிப் பள்ளி கட்டி முடிக்கப்படும் நிலையில், சுற்றுச்சுவர் அமைக்க கட்டுமான பணி கள் துவக்கப்பட்டுள்ளது.இதனால் விவ சாயிகள் மற்றும் பொதுமக்களின் போக்கு வரத்து பாதித்துள்ளது. ஆகையால் மாதிரி பள்ளியின் வடபுறமாக கிழக்கு, மேற்கு பாதையை, விட்டு விட்டு மற்ற இடங்களில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் விவசாயிகள்  உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார்.