districts

img

செஞ்சியில் விவசாயிகள் சாலை மறியல்

விழுப்புரம்,செப்.20- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக நெல் அறுவடை தொடங்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.  செவ்வாய்கிழமை (செப்.19) ஒரு நாள் மட்டும் 4,600 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், இந்த நெல் மூட்டை கள் கொள்முதல் செய்யப்பட வில்லை.  இது குறித்து ஒழுங்கு முறை விற்பனைக் கூட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எடை போடும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணிகளை புறக்கணித்தனர். இதனால் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட 4,600 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தினமும் விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்து வருவதாலும், ஈ-நாம் திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்வ தற்கு வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது. இதனால், இப்பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்படும் வரை விளை பொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என அறி விக்கப்பட்டிருந்தது.  இந்த அறிவிப்பு செவ்வாய்கிழமை இரவு தான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அறி விப்பாக வைக்கப்பட்டது. இதை அறியாத விவசாயி கள் கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  நெல் மூட்டைகளை புதன்கிழமை (செப்.20) விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகாலையில் வந்த டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகளை உள்ளே அனுமதிக்க வில்லை. இதனை கண்டித்து நெல் மூட்டைகளை கொண்டு வந்த வாகனங்கள் செஞ்சி- திண்டிவனம் சாலையில் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். பின்னர், தகவல் அறிந்து வந்த போக்கு வரத்து மற்றும் செஞ்சி காவல்துறையினர் விவ சாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், நெல் மூட்டைகளை உள்ளே அனுமதித்ததால் சாலை மறியல் முடிவுக்கு வந்தது.