districts

img

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, மே 13- கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலை யத்திற்குள் பயணிகளுக்கு பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலை யத்திற்கு சென்னை, திருவண்ணா மலை,சேலம் மூன்று வழித்தடங்களில் இருந்தும் பெங்களூரு, செல்லும் அனைத்து வாகனங்களும்  வந்து செல்லும் என்பதால் இரவு 12 மணி வரை பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பயணிகள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்று மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர்  செல்வகுமார் நிதியிலிருந்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் அரசு நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.10 லட்சத்தில் தொடங்கப்பட்டது. சில நாட்கள் மக்கள் பயனடைந்து வந்த நிலையில் பேருந்து நிலையத்தில் முறை யான பராமரிப்பில்லாத தால் நவீன சுத்தி கரிப்பு நிலையத்தின் குழாய்கள்,பல உப கரணங்களை உடைத்துள்ளன. இதனால் பயணிகள் குடிநீருக்கு சிரமப்பட்டு மீண்டும் அங்குள்ள தனியார் கடைகளில் குடிநீர் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மக்கள் கோரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு உடனடியாக தலையிட்டு சுத்திகரிப்பு நிலையத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுத்தார். பயணிகள் மகிழ்ச்சி அடைந்த சில நாட்களிலேயே சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் வரவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர். நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாததே காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், வட்டார வளர்ச்சி அதிகாரியும் உடன் நடவடிக்கை எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நாள் முழுவதும் கிடைக்க வேண்டும், நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்புவதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், சுத்திகரிப்பு நிலையத்தை சீரழிக்கும் சமூக விரோதிகளை கண்காணித்து கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி வட்டக் குழு  பொறுப்புச் செயலாளர் பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.