districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: மேலமேடு பள்ளிக்கு புதிய கட்டிடம்

விழுப்புரம், செப்.24- விழுப்புரம் அருகே உள்ள காவணிப் பாக்கம் பஞ்சாயத்துக்குட்பட்டது மேல மேடு கிராமம், இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி 1972ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது இந்த பள்ளிக் கட்டிடம் பழுடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மேற்கூரையில் வேயப்பட்டுள்ள ஓடுகளும் உடைந்திருப்பதால் மாணவர்கள் அச்சத்துடனே பள்ளிக்குச் செல்வதாக பெற்றோர்கள் கூறுகின்றனர் என தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது, இதையடுத்து மாணவர்கள் பாதுகாப்பான வேறு கட்டிடத்திற்கு மாற்றுமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் மோகன் அறிவுறுத்தினார். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களை பள்ளிக்கு அருகிலேயே ஒருவர் வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்து அங்கு ஆசி ரியர்கள் மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுத்தார். பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்திலேயே அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டி டம் விரைவில் கட்டித்தர மாவட்ட ஆட்சி யருக்கு பரிந்துரை செய்யப்படும். அது வரை பள்ளிக்கு அருகிலேயே ஒரு காலிமனையில் தற்காலிகமாக கூரை அமைக்கப்பட்டு அதில் பள்ளி இயங்கு வதற்கு கோலியனூர் வட்டார வளர்ச்சி அதி காரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிருஷ்ணப்பிரியா உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், வட்டாட்சியர் ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

;